நான் கஞ்சனடி ....
பார்....
உன் நிழலை கூட
பூமிக்கு தராமல்
என்னுள் வாங்கி வருகிறேன் .....
Wednesday, December 31, 2008
உன் பெயர்
உன் பெயர் சொல்கையில்
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....
Thursday, November 27, 2008
Wednesday, November 26, 2008
Tuesday, October 21, 2008
கவிதைகள் மட்டும்
உன்னை நான் காதலிக்கிறேன்
உனக்காக ஏங்குகிறேன் ....
நீயோ என்னை புரிந்து கொள்ள வில்லை
என் காதலும் என்னை புரிந்து கொள்ள வில்லை ...
நாட்களை கழிக்கிறேன்
உன் காதலில் கிடைத்த கவிதைகளை
படித்துக்கொண்டு ........
உனக்காக ஏங்குகிறேன் ....
நீயோ என்னை புரிந்து கொள்ள வில்லை
என் காதலும் என்னை புரிந்து கொள்ள வில்லை ...
நாட்களை கழிக்கிறேன்
உன் காதலில் கிடைத்த கவிதைகளை
படித்துக்கொண்டு ........
Thursday, April 10, 2008
Saturday, March 29, 2008
காதல்
என் நெஞ்சில்
நண்பர்கள் சாய
அனுமதி மறுக்கிறேன்
அவர்கள் சாய்ந்து
என் நெஞ்சில் தூங்கி கொண்டிருக்கும்
நீ முழித்தால்
நான் இறந்துவிடுவேனே
நண்பர்கள் சாய
அனுமதி மறுக்கிறேன்
அவர்கள் சாய்ந்து
என் நெஞ்சில் தூங்கி கொண்டிருக்கும்
நீ முழித்தால்
நான் இறந்துவிடுவேனே
வாய் குழறல்
உன் கண்களை கண்டதும்
என் வாய் குழறுகிறது
காதலை கூட சொல்ல முடியவில்லை
யாரங்கே !
என் காதலியின் கண்களை
தயவு செய்து கட்டுங்கள்
இன்றாவது
காதலை கூறுகிறேன் அவளிடம்...
என் வாய் குழறுகிறது
காதலை கூட சொல்ல முடியவில்லை
யாரங்கே !
என் காதலியின் கண்களை
தயவு செய்து கட்டுங்கள்
இன்றாவது
காதலை கூறுகிறேன் அவளிடம்...
கோவில் வேண்டாம் அன்பே
அன்பே!
ஆண் தெய்வங்களின் கோவிலுக்கு
செல்லாதே ....
அதுவும்
கணேசனின் கோவில் பக்கமே செல்லாதே ....
நேற்று
நீ அவனை கும்பிட்டு கொண்டிருக்கையில்
அவன்
உன் அழகை
ரசிக்கிறான் பாதகன் ....
ஆண் தெய்வங்களின் கோவிலுக்கு
செல்லாதே ....
அதுவும்
கணேசனின் கோவில் பக்கமே செல்லாதே ....
நேற்று
நீ அவனை கும்பிட்டு கொண்டிருக்கையில்
அவன்
உன் அழகை
ரசிக்கிறான் பாதகன் ....
தெரியுமா உனக்கு ?
தெரியுமா உனக்கு ?
குற்றம் புரிந்தவர்களை விட
குற்றம் புரிய தூண்டியவர்களுக்கே
அதிக தண்டனை என்று ...
உன்னை காதலித்த எனக்கே
மரணதண்டனை எனில்
காதலிக்க தூண்டிய
உன் கண்களுக்கு .....?
குற்றம் புரிந்தவர்களை விட
குற்றம் புரிய தூண்டியவர்களுக்கே
அதிக தண்டனை என்று ...
உன்னை காதலித்த எனக்கே
மரணதண்டனை எனில்
காதலிக்க தூண்டிய
உன் கண்களுக்கு .....?
இரு உயிர் ஒரு உடல்
ஆக்ஸிஜன் பற்றாகுறையாம் எனக்கு
மருத்துவர் கூறுகிறார்
உன்னை வெளியேற்ற சொல்லி
ஒரு உடலில் இரு உயிர் வாழக் கூடாதாம்
எனவே
அன்பே
உன்னில் என்னை கலக்க விடு
மருத்துவர் கூறுகிறார்
உன்னை வெளியேற்ற சொல்லி
ஒரு உடலில் இரு உயிர் வாழக் கூடாதாம்
எனவே
அன்பே
உன்னில் என்னை கலக்க விடு
இப்படித்தானோ நீயும்
உன்னை எதிர்பார்த்து ...........
நீ இல்லாத நாட்களில்
என் வீட்டு நாட்காட்டியில்
முகம் புதைக்கிறேன்
உன் வீட்டுச் சாலையில்
கண் தொலைக்கிறேன்
உன் சுவாசக் காற்றை
நம் ஊரில் அலைகிறேன்
அன்பே
உனை நான்
நீங்கிய நாட்களில்
நீயும் இப்படித்தானோ ......?
நீ இல்லாத நாட்களில்
என் வீட்டு நாட்காட்டியில்
முகம் புதைக்கிறேன்
உன் வீட்டுச் சாலையில்
கண் தொலைக்கிறேன்
உன் சுவாசக் காற்றை
நம் ஊரில் அலைகிறேன்
அன்பே
உனை நான்
நீங்கிய நாட்களில்
நீயும் இப்படித்தானோ ......?
கவிதையே
கவிதை எழுத
எண்ணி அமர்ந்தேன் ..
யோசித்தேன்
யோசித்தேன்
கவிதையின் நிழல் கூட தென்படவில்லை
உன் பெயரை எழுதினேன்
கவிதைத் தொகுப்பையே எழுதிய திருப்தி எனக்கு .....
எண்ணி அமர்ந்தேன் ..
யோசித்தேன்
யோசித்தேன்
கவிதையின் நிழல் கூட தென்படவில்லை
உன் பெயரை எழுதினேன்
கவிதைத் தொகுப்பையே எழுதிய திருப்தி எனக்கு .....
இதயமே
கண்ணே!
வெட்கமாக உள்ளது
இதயம் இல்லாதவனாம்
நண்பர்கள் கூறுகிறார்கள்
அதற்காகவாவது
விரைவில் உன் இதயத்தை அனுப்பி விடு
வெட்கமாக உள்ளது
இதயம் இல்லாதவனாம்
நண்பர்கள் கூறுகிறார்கள்
அதற்காகவாவது
விரைவில் உன் இதயத்தை அனுப்பி விடு
ஆஸ்கார் அன்பே
அன்பே!
கமலுக்கு முன்
ஆஸ்கார் வாங்கிவிடுவாயோ ...?
என்னைப் பார்க்கும்பொழுது
உன் மனதில் பூக்கும் காதலை
உன் கண்களின் பரபரப்பு
எங்கே காட்டிவிடுமோ என
என்னை காணாதது போல் செல்கிறாயே......
கமலுக்கு முன்
ஆஸ்கார் வாங்கிவிடுவாயோ ...?
என்னைப் பார்க்கும்பொழுது
உன் மனதில் பூக்கும் காதலை
உன் கண்களின் பரபரப்பு
எங்கே காட்டிவிடுமோ என
என்னை காணாதது போல் செல்கிறாயே......
காவியக் காதல்
நம் காதல்
தோல்வியில் முடியும் என்று
என்றோ உனக்கு தெரிந்திருக்கிறது
அதனால்தானே
நம் காதலை
'காவியக் காதல்' என்றாய் ?
தோல்வியில் முடியும் என்று
என்றோ உனக்கு தெரிந்திருக்கிறது
அதனால்தானே
நம் காதலை
'காவியக் காதல்' என்றாய் ?
இயற்கையே இது நியாயமா ?
இயற்கையின் மேல்
எனக்கு கடுங்கோவம்
நீரோ உன்னை நனைக்கிறது
நிலமோ உன்னை தாங்குகிறது
காற்றோ உன்னை தழுவுகிறது
தீயோ உன்னை சுடேற்றுகிறது
ஆகாயமோ உன்னை காக்கிறது
ஆனால் இவற்றில்
எதுவுமே என்னால் முடியவில்லையே
பிறகு கோவம் வராமல் ...?
எனக்கு கடுங்கோவம்
நீரோ உன்னை நனைக்கிறது
நிலமோ உன்னை தாங்குகிறது
காற்றோ உன்னை தழுவுகிறது
தீயோ உன்னை சுடேற்றுகிறது
ஆகாயமோ உன்னை காக்கிறது
ஆனால் இவற்றில்
எதுவுமே என்னால் முடியவில்லையே
பிறகு கோவம் வராமல் ...?
என் சந்திரனே...
எந்த மடையன் கூறியது ?
சூரியனிடம் இருந்து
ஒளியை சந்திரன் பெற்று
விண்வெளியில் உலவுகிறதென..
உன் கண்ணின் ஒளியை
நான் பெற்று
இந்த மண்ணில் உலவுகிறேனே?
சூரியனிடம் இருந்து
ஒளியை சந்திரன் பெற்று
விண்வெளியில் உலவுகிறதென..
உன் கண்ணின் ஒளியை
நான் பெற்று
இந்த மண்ணில் உலவுகிறேனே?
சகியே
அழகில் ஐஸ்வர்யா ராய்
அன்பில் அன்னை தெரசா
அறிவில் கலைமகள் சரஸ்வதி
என்றெல்லாம்
உன்னை பொய்யாக வர்ணிக்க
மனம் துடிக்கிறது
அதற்காகவாவது
சகியே
என்னை காதலித்து விடு...
அன்பில் அன்னை தெரசா
அறிவில் கலைமகள் சரஸ்வதி
என்றெல்லாம்
உன்னை பொய்யாக வர்ணிக்க
மனம் துடிக்கிறது
அதற்காகவாவது
சகியே
என்னை காதலித்து விடு...
உன் காதல்
அன்பே!
எனக்கு மேகக் கூட்டங்கள் வேண்டாம்
உன் கூந்தல் போதும்
துள்ளி விளையாடும் மீன்கள் வேண்டாம்
உன் கண்கள் போதும்
...............................
..........................
இவையனைத்தும்
தர மறுத்தால்
நீ கூட வேண்டாம்
உன் காதல் மட்டும் போதுமடி .....
எனக்கு மேகக் கூட்டங்கள் வேண்டாம்
உன் கூந்தல் போதும்
துள்ளி விளையாடும் மீன்கள் வேண்டாம்
உன் கண்கள் போதும்
...............................
..........................
இவையனைத்தும்
தர மறுத்தால்
நீ கூட வேண்டாம்
உன் காதல் மட்டும் போதுமடி .....
வாழ்வா சாவா ?
அன்பே...!
வார்த்தை முத்துக்களை
உதிர்த்து விடு !
விருப்பா வெறுப்பா என்று
விருப்பமாயின்
நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன்
உன் அன்பில்
வெறுப்பாயின்
நான் இறந்து கொண்டே இருப்பேன்
உன் நினைவில் .....
வார்த்தை முத்துக்களை
உதிர்த்து விடு !
விருப்பா வெறுப்பா என்று
விருப்பமாயின்
நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன்
உன் அன்பில்
வெறுப்பாயின்
நான் இறந்து கொண்டே இருப்பேன்
உன் நினைவில் .....
காத்திருக்கவா...?
ஒரு யுகமேனும்
நான் காத்திருப்பேன்
உனக்காக ...
ஒரு கணம் கூட
என் உயிர் காத்திருக்காது
உன் காதலுக்காக ....
நான் காத்திருப்பேன்
உனக்காக ...
ஒரு கணம் கூட
என் உயிர் காத்திருக்காது
உன் காதலுக்காக ....
ஜனனம்
ஞானிகள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
புத்தர்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
மகாத்மாக்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
சாதனையாளர்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
ஆனால்
நான் உருவாக்கப் படவில்லை
ஜனித்தேன்
ஒவ்வொரு முறையும்
உன் பார்வை தீண்டலில்
நான் சிக்கும் பொழுதெல்லாம் ....
உருவாக்கப் படுகிறார்கள்
புத்தர்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
மகாத்மாக்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
சாதனையாளர்கள் ஜனிப்பதில்லை
உருவாக்கப் படுகிறார்கள்
ஆனால்
நான் உருவாக்கப் படவில்லை
ஜனித்தேன்
ஒவ்வொரு முறையும்
உன் பார்வை தீண்டலில்
நான் சிக்கும் பொழுதெல்லாம் ....
மின் தேக்கி
மின்தேக்கியில்
மின்சாரத்தை சேமிக்கலாமாம்....
அன்பே
உன் புன்னகைகளையும்
அதில் சேமித்து விடலாமா...?
மின்சாரத்தை சேமிக்கலாமாம்....
அன்பே
உன் புன்னகைகளையும்
அதில் சேமித்து விடலாமா...?
காதல் தோல்வி
உண்மையான காதலுக்கு
தோல்வியை தழுவுவதில்தான் சந்தோசம் போலும்...
லைலா மஜ்னு
ஜுலியட் ரோமியோ
அமராவதி அம்பிகாபதி
பார்வதி தேவதாஸ் வரிசையில்
நிரப்பி விடலாமா
உன் பெயரையும், என் பெயரையும் .....?
அனாதை சிறுவன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயினிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
படிக்கிறான் கண்களில் கண்ணீருடன்
.........................................
அனாதைச் சிறுவன்
தாயினிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
படிக்கிறான் கண்களில் கண்ணீருடன்
.........................................
அனாதைச் சிறுவன்
Thursday, March 27, 2008
மழை ....
தமிழ்நாட்டில் மழை இல்லையா ...?
யார் செப்பியது ....?
நான் நனைகிறேனே
அவளின் பார்வை மழையில் நான் ....
யார் செப்பியது ....?
நான் நனைகிறேனே
அவளின் பார்வை மழையில் நான் ....
தண்டனை
கொலை செய்யவில்லை
கொள்ளை அடிக்கவில்லை - ஆனாலும்
மரணதண்டனை விதிக்கப்பட்டது
உன்னை காதல் செய்த பாவத்தினால்..
கொள்ளை அடிக்கவில்லை - ஆனாலும்
மரணதண்டனை விதிக்கப்பட்டது
உன்னை காதல் செய்த பாவத்தினால்..
வன்முறையாளினியே ....
அன்பே...
தலைமறைவாகிவிடு
வன்முறையாளர்களை காவல்துறை தேடுகிறதாம்...
என் மனதில்
வன்முறையை தூண்டுவதால்
அவர்கள் உன்னையும் பிடிக்கக்கூடும்...
தலைமறைவாகிவிடு
வன்முறையாளர்களை காவல்துறை தேடுகிறதாம்...
என் மனதில்
வன்முறையை தூண்டுவதால்
அவர்கள் உன்னையும் பிடிக்கக்கூடும்...
Subscribe to:
Posts (Atom)