Saturday, October 31, 2009

பெண்களிடம் நான்

பெண்களை கண்டால்
கிண்டல் செய்வது
எனக்கு வாடிக்கை ...
உன்னை கண்டால்
அடங்கி போவது
எனக்கு வேடிக்கை ...
பெண்களிடம் கண்ணை
பார்த்து பேசுவது
எனக்கு வாடிக்கை ...
உன்னிடம் பேசுகையில் மட்டும்
நிலம் நோக்குவது
எனக்கு வேடிக்கை ...
பெண்களின் அருகில்
இருக்கும் பொழுது
இதயம் துடிப்பது
எனக்கு வாடிக்கை ...
உன் அருகில்
இருந்தால் மட்டும்
இதயம் வெடிப்பது
எனக்கு வேடிக்கை ...
பெண்களிடம்
திணராமல் பேசுவது
எனக்கு வாடிக்கை ..
உன்னை கண்டால் மட்டும்
என் உதடுகள்
தந்தி அடிப்பது
எனக்கு வேடிக்கை ..

சந்தேகம்

பாண்டிய மன்னனுக்கு
அன்று வந்த சந்தேகம்
இன்று எனக்கும் வருகிறது ...
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே மனம் உண்டா என்று ...
நீ தலை குளித்து விட்டு என்னருகே வருகையில் ...

சூரியகாந்தியின் மயக்கம்

சூரியன் உதிக்கும் நேரம்
தோட்டம் பக்கம் இனி போகாதே ..
சூரியனை கண்டு மலர வேண்டிய
சூரியகாந்தி பூக்கள்
உன் அழகில் மயங்கி கிடப்பதை பார்...

அழகு சிலை

வித்தியாசமான
அழகு சிலையடி நீ ....
நீ நடமாடினால்
உறைந்து சிலையாகிறேன் நான் ...

அர்ஜுனா விருது

அடியே ... !
நீ என்னை பார்க்கையில்
உன் விழிகள் வீசும்
பௌன்சரிலும் பீமரிலும்
நான் நிலை குலைந்து போகிறேன் ...
ஆச்சர்யமாக இருக்கிறது ...
இன்னும்
உனக்கு ' அர்ஜுனா' விருது கிடைக்காதது ...