Friday, November 26, 2010

என் பெயர் சதீஷ்

இந்தி மொழி படித்தது இல்லை நான் ..!!!
காதல் மொழி படிப்பதால்
வந்தேன் உன்னுடன் திரைப்படத்திற்கு ...!!!

மூன்று மணி நேரம் சேர்ந்திருந்த நாம்
மூச்சு வரை சேரலாமே என்ற என் எண்ணமே
நமக்குள் ஊடல் வர காரணம் !!!!!

வார்த்தை வாளால்
கிழித்திருந்தால் கூட
சிரித்திருப்பேன் நான் ...!!!

மௌனம் எனும் கத்தியால்
குத்தி விட்டாய் என்னை..
சிதைந்துவிட்டேன் நான்....!!!!

உலகத்திற்கு
நாம் பொருத்தமான ஜோடியாக தெரிந்தாலும்
உன் கண்களுக்கு
ஏனோ இன்னும் ஜோடியாக கூட தெரியவில்லை ...!!!

எந்த மொழி படமாயினும்
எத்தனை மணி நேரமாயினும்
படம் பார்க்க நான் தயார் ...,
என்னுடன் நீயும் இருப்பாய் எனில் ...!!!!

என்னவளே ...!!!
என் பெயர் சதீஷ்.... ,மற்றும்
நான் கெட்டவன் இல்லை...!!!!!

Saturday, November 20, 2010

எந்திரன்

உன்னை பார்க்கும் முன்பு ...,
இதயம் இல்லாத இயந்திரமாகவும்
மூளை உள்ள மனிதனாகவும் இருந்தேன்... !!!
உன்னை பார்த்த பின்பு ...,
இதயம் உள்ள இயந்திரமாகவும்
மூளை இல்லாத மனிதனாகவும் மாறி விட்டேன் ...!!!!

Saturday, November 6, 2010

பட்டாசு

வேண்டாம் பட்டாசு
இனி
உன் சிரிப்பை தா ...!!!!

Tuesday, November 2, 2010

காதல் அலை

அலைக்கும் கரைக்கும் உள்ள தொடர்பு
காதலுக்கும் நட்புக்கும் உள்ள தொடர்பு போல..!!!!
அலை என்றும்
கரையோடு இருக்க முடியாது என்று தெரிந்தாலும்
கரையை தொட முயற்சி செய்வதை
அது ஒரு போதும் நிறுத்தாது
அது போலத்தான்
நானும், என் காதலும் ...!!!!
நட்பின் கரையில் நீ நின்றாலும்
காதல் அலையால்
உன்னை என்றும் நனைத்து கொண்டே இருப்பேன்..!!!!

Sunday, October 24, 2010

வாசகம்

காதலை
வாசகத்தில் மட்டும் படித்தவன்
இன்று உன்னால்
என் சுவாசத்தில் படிக்கிறேன் ..!!!!

Friday, October 22, 2010

எடுத்துக்காட்டு

நம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு ,
காதலிக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உன்னை நான் காதலிப்பது ...!!!!
அவநம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு ,
காதலிக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உன்னை நான் காதலிப்பது ...!!!!
இந்த கவிதை ஒரு எடுத்துகாட்டு ,
காதல் வந்தால்
குழப்பம் தலைக்கேறும் என்பதற்கு ....!!!!!

Saturday, August 7, 2010

நினைவுகள்

உனக்கு பிடித்த பாடல் பார்க்கும் பொழுது ..
உனக்கு பிடித்த விளையாட்டு வீரன் விளையாடும் பொழுது ..
உன் செல்லிடைபேசியை எங்காவது பார்க்கும் பொழுது ..
நீயும் நானும் சென்ற இடங்களை பற்றி படிக்கும் பொழுது ..
நீயும் நானும் எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது..
மனதின் ஓரத்தில் வைக்க எண்ணி உன்னை ஒதுக்கி வைத்தாலும்
கரையை தேடி வரும் அலை போல
தேடி வந்து வலி கொடுக்கிறது உன் நினைவுகள் ... !!!!

Saturday, May 8, 2010

அம்மா

மாதா பிதா குரு தெய்வம் .. !!
இவர்களில் யாராகவும்
மாற முடியும்
அம்மாவால் ... !!!
இவர்களில் யாராலும்
மாற முடியாது
அம்மாவாய் ... !!!!

Monday, May 3, 2010

சிகப்புக்கொடி

உனக்கு பிடித்த நிறம் வெள்ளையா...???
நம்ப மாட்டேன் நான் ... !!!!
என் மனதில் சிகப்புக்கொடி நாட்டி
என்னுள் புரட்சி ஏற்படுத்துபவள் நீ ....!!!
உனக்கு எப்படி வெள்ளை பிடிக்கும் ...???

Thursday, April 22, 2010

கரை தாண்டும் கடல்

அழகே !
கடற்கரை பக்கம் செல்லாதே ..!!
வந்துவிடப்போகிறது சுனாமி ...!!!
உனைத்தொட்டு பார்க்கும் ஆர்வத்தில்
கரை கடந்துவிடப் போகிறது கடல் ...!!!!

Tuesday, March 30, 2010

நிலவே

இரவின் மடியில்
மண்ணில் இருக்கும் உன்னையும்
விண்ணில் இருக்கும் நிலவையும் சேர்த்து
புகைப்படம் எடுக்க முயற்சி செய்கிறேன் ...!!!
நிலவை விட அழகாக நீ இருப்பதால்
தாழ்மை உணர்ச்சியில்
புகைப்படத்திற்கு
முகம் காட்ட மறுக்கிறது
விண்ணில் இருக்கும் நிலவு ... !!!!

Sunday, March 28, 2010

பிரிவு

மலர்கள் மாலையில் மடிவது
மறுநாள்
பிறப்போம் என்ற நம்பிக்கையில் ....
நாமும் இன்று பிரிவோம்
என்றாவது எங்காவது
சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ....

Thursday, March 11, 2010

கண்ணிமை கன்னியே

கருமை நிறத்தில் இருப்பவை
மனதை கவராது என்ற
என் எண்ணம் உடைந்தது,
உன் கண்ணிமை பார்த்த கணம் ...!!!!

சளி

தினமும்
எனக்கு சளி பிடிக்கிறது...
உன் காதல் மழையில் நனைந்து ...!!!!

சங்கு போல நான்

சுட்டாலும்
சங்கு தன் வெண்மை நிறம் துறக்காது..!!!
நானும் சங்கு போலத்தான் ...
என்னை நீ
வெறுத்தாலும்
என் காதல் நான் துறக்க மாட்டேனடி .. !!!!

விட்டில் பூச்சி

விட்டில் பூச்சிகளும், ஆண்களும் ஒன்றுதான் ...
செத்துப்போவோம் என்று தெரிந்தும்
விளக்கில் விழுவது
விட்டில் பூச்சியின் வாடிக்கை ...!!!
தோற்றுப் போவோம் என்று தெரிந்தும்
காதலில் விழுவது
ஆண்களின் வாடிக்கை ... !!!!!

காற்றையும் நேசிப்பவன்

காற்றையும்
எனக்கு நேசிக்க தோன்றுகிறது ...!!!
காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
வேக வேகமாய் சரிசெய்துவிட்டு
யாரவது பார்த்தார்களா என்று
அழகாய் சுற்றி பார்த்த கணம் ..... !!!!

வேண்டுகோள்

வகுப்பில் இனி
என்னருகில் உட்காராதே ...
வகுப்பு முழுவதும்
உன்னை திரும்பி பார்த்துகொண்டு இருந்ததில்
வலிக்கிறது என் கழுத்து ....!!!

கலவரக்காரி

தெரியவில்லை எனக்கு ..
எங்கிருந்து வந்தாய்
என்ன பேசினாய்
என்ன செய்கிறாய்
என்ன செய்வாய்
தெரியவில்லை எதுவும் ...
எனக்கு தெரிந்தது எல்லாம்
நீ என் இதயத்தில் நுழைந்து
கலவரம் செய்கிறாய் என்பது மட்டுமே ....!!!

Thursday, February 25, 2010

மறுப்பு

கண்களில் வழியும் காதலை
உதடுகளின் வார்த்தைகள் மறுக்கிறதே ... !!!!
பூக்களில் மடியும் வண்டுகளின் கூட்டத்தில்
நானும் சேர்ந்துவிட்டேனோ...?????

கல்லாதவன்

கல்லாதவன்,கண்ணில்லாதவன்
இருவரும் ஒன்றாம்
கூறுகிறார் வள்ளுவர் ....
அப்படியெனில் நானும் கண்ணில்லாதவன்தான்...
உன் கண்ணின் மொழியை
படிக்க முடியவில்லையே என்னால் ...

Wednesday, January 20, 2010

கலகம்

உன் கண்கள் என்ன
நாரதர் ஜாதியா ...????
பார்க்கும் போதெல்லாம்
கலகம் மூட்டுகிறதே என் நெஞ்சில் ..... !!!!!