Saturday, May 30, 2009

உணர்ச்சி

பூக்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கண்டேன்
உன் கூந்தல் பூக்கள் உதிர்ந்ததும்
தற்கொலை செய்து கொண்டபோது...

தனிமை

பெங்களுரு ..
குளிரும் நகரம்தான் ..
ஆனால் எனக்கு மட்டும் எரிகிறது ...
உன் பிரிவு சோகம்
என்னை தகிக்கிறது ....
அன்று
நீ உன் அருகாமை தந்து
சொர்க்கம் தந்தாய்
இன்று
நீ உன் பிரிவு தந்து
நரகம் தருகிறாய் ...
உன்னை சந்திக்கும் நாள்
சற்று தொலைவில் இருந்தாலும்
கடலை கடப்பது போல் உள்ளதடி
ஒவ்வொரு நாளையும் கடப்பது ....
இந்த பிரிவு
தற்காலிகம்தான் எனினும்
சிறிது நேரம்
நிலம் கண்ட மீனை போல்
துடிக்கிறேன் நான் ...

வெட்கம்

நிலவுக்கும் காதல் வெட்கமோ ...??
ஆதவனை கண்டதும்
ஓடி ஒளிகிறாலே....