Tuesday, January 27, 2009

பள்ளிக்கூடம்

இன்றும்
நினைவில் இருக்கிறது ...

தந்தை கைப்பிடித்து
பள்ளி சென்ற கணங்கள் ...

ABCD தவறாக எழுதி
ஆசிரியரிடம் அடிவாங்கிய கணங்கள்...

முதல் முறை பேச்சு போட்டியில்
வெற்றி பெற்ற கணங்கள் ...

நண்பனிடம் சண்டை போட்டு
அப்பாவிடம் அழுத கணங்கள் ..

பள்ளிநேரத்தில் படம் பார்க்க சென்று
மாட்டிக்கொண்ட கணங்கள் ....

பிடிக்காத வாத்தியாரின் பட்டப்பெயரை
சுவற்றில் கிறுக்கி குதூகலித்த கணங்கள் ...

நட்பு நான்கு இருந்தால் நானூறு செயல்
புரியலாமென புரிந்துகொண்ட கணங்கள் ...

வாழ்க்கை கல்வியை
ஒரு வருடம் மட்டும் பள்ளியில்
நான் பயிலவில்லை ....

பள்ளியில்
ஒவ்வொரு நாளிலும்
நான் கற்றுகொண்டது
வாழ்க்கையின் வெவ்வேறு பாடங்கள்....