Sunday, March 8, 2009

செம்பு நான்

தங்கத்துடன் கலந்த
செம்பு நான் ...
உன்னுடன் இருந்தால்
உலகை நான் மதிப்பதில்லை ...
உன்னை நீங்கினால்
உலகம் என்னை மதிப்பதில்லை ....

மாற்றம்

இந்த உலகில்
மாற்றமென்பதே நிலையானது !!!!
என் காதல்
உன் கல் மனதையும் மாற்றும் ...
மாற
தயாராய் இரு என் கண்ணே....

மோப்ப நாய்

நானும்
ஒரு வகையில் மோப்ப நாய்தான் ....
என் நெஞ்சில்
நிலநடுக்கம் தர
நீ என்னை நெருங்கி வந்தால்
கண்டுபிடிப்பேன் நானும் .....

யுத்தம்

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது ..
ஆம், என்னவள் எதிரே வருகிறாள்
கண்ணில் சண்டை போட....

கீச்சு குரல் கிளியே

குயிலின் குரல்தான்
சிறந்ததா என்ன ....?
யார் சொன்னது
என்னவளின் கீச்சு குரல்
தேனாய்
என் காதில் ஊற்றுகிறதே ....

காற்று

காற்றும் புகாமல்
என் அறையை கட்டினேன்
நீ வந்து சென்றால்
உன் வாசம்
எளிதில் நீங்க கூடாதல்லவா ....

உன் கை பிடித்தால்

நிலவில்
நடப்பதாய் உணர்கிறேன்
உன் கை பிடித்து நடக்கையில் .....

தேவதை ....

தேவதைகளை
நம்பாமலிருந்தேன்
உன்னை வெள்ளை உடையில் பார்க்கும் வரை ...

நினைவு

வந்து சென்றாயே என் கனவில் ...
தந்து சென்றாயே உன் நினைவை ....

பூவே...

உறங்காமல்
உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ
தூக்கம் கலைந்து எழுவது
காலையில்
மலரும் பூ போல் இருப்பதை
பார்த்து ரசிப்பதற்காக ......

நாத்திகன்

நாத்திகனாய் இருந்தாலும்
நிதம் கோவில் வருகிறேன்
'கோவில் அம்மனை ' பார்க்க அல்ல
என்
'காதல் அம்மனை ' பார்க்க ....

மேகம்

உன்
முகமென்னும் நிலவுக்கு
கூந்தல் என்ன மேகமா .... ?
மேகம் கொண்டு
நிலவை
அடிக்கடி மறைக்கிறாயே ....

முகாரி

காதலும் கஜல்தான்
எனக்கு
முகாரி பாடும் வரை .....