நட்பென்னும் பாயசம்
திகட்ட திகட்ட தந்தவளும் நீதான் ...
பிரிவென்னும் விஷம்
திணற திணற தந்தவளும் நீதான் ...
உன் போல் எவளும் இதுவரை
எனக்கு இருந்ததில்லை ....
இனிமேலும் இருக்க போவதில்லை ...
யார் கண்ணோ
பட்டு விட்டது ...
நம் நட்பு
பட்டு விட்டது...
என் நெஞ்சமோ
புண் பட்டு விட்டது...
உன் மேல் பிழையா
என் மேல் பிழையா ?
எனக்கு தெரியாது ...
உன் ஈகோ போகுமா
என் ஈகோ போகுமா
எனக்கு தெரியாது ...
உன் கோபம் தீருமா
என் கோபம் தீருமா
எனக்கு தெரியாது ...
நம் நட்பில்
வசந்தகாலம்
வருங்காலத்தில் வருமா
எனக்கு தெரியாது ...
இருந்தும் நடமாடுகிறேன் ....
நம் நட்பு வசந்தகாலத்தின்
சுகமான நினைவுகளை
அசை போட்டுக்கொண்டு .....
Sunday, September 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment