Monday, July 13, 2009

உனக்காக ஒரு பாடல்

ஆண் குரல்:
உன் பார்வை ஒன்று போதும்
நான் குழந்தையாய் மாற ....
உன் விரல் நுனி உரசல் ஒன்று போதும்
நான் உறைந்து போக ...
உன் காதல் ஒன்று போதும்
நான் மீண்டும் பிறக்க ...

பெண் குரல் :
கரு நிற மேகம் கண்டால்
உன் கூந்தல்
என் கண்முன்னே ..
ஒளிரும் நட்சத்திரங்கள் கண்டால்
உன் சிரிப்பு
என் கண்முன்னே ..
தகிக்கும் சூரியன் கண்டால்
உன் கோபம்
என் கண்முன்னே ...
அழகிய முழுநிலவை கண்டால்
உன் முகம்
என் கண்முன்னே ....

ஆண் குரல் :
பாரதியார் புகைப்படம் கண்டால்
என் மீசை வருகிறதா
உன் கண்முன்னே ....
வளைந்து நெளிந்த சாலை கண்டால்
என் மூக்கு வருகிறதா
உன் கண்முன்னே ...
காதல் பாடல்கள் கேட்கையில்
என் நினைவு வருகிறதா
உன் கண்முன்னே ...
முருங்கை காய் சாப்பிடுகையில்
என் சில்மிஷங்கள் வருகிறதா
உன் கண்முன்னே ....

பெண் குரல் :
உன் பார்வை ஒன்று போதும்
நான் குழந்தையாய் மாற ....
உன் விரல் நுனி உரசல் ஒன்று போதும்
நான் உறைந்து போக ...
உன் காதல் ஒன்று போதும்
நான் மீண்டும் பிறக்க ...

No comments: