Wednesday, February 11, 2009

அம்மாவாகிய நான்

உன் தெற்றுபல் தெரிய
நீ சிரிக்கும் சிரிப்பு அழகு...

யாரவது கூப்பிடுகையில்
நீ ஓடி ஒளிவது அழகு ....

சாப்பாடு ஊட்டுகையில்
நீ செய்யும் அடம் அழகு .....

பள்ளியிருந்து வந்ததும்
நீ கேட்கும் மடிதூக்கம் அழகு ...

அம்மா என்றழைக்காமல் செல்லமாக
எனை பேர் சொல்லி அழைப்பது அழகு....

கண்ணே !!!!!!
கண்ணின் மணியே !!!!!
சில மாதங்கள்
நான் உனக்கு
பிராண வாயு அளித்திருக்கலாம்

ஆனால்
பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கு பிரான வாயு அளிப்பது
நீதான் .... !!!!!!

No comments: